Skip to main content

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

சார்ந்த செய்திகள்