
சிம்புவின் 'அஅஅ' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேனின் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா ரஷியாவைச் சேர்ந்த ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தார்.மிகப்பெரும் கோடீசுவரரான இவர் சிறந்த டென்னீஸ் விளையாட்டு வீரர் ஆவார். உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. பின்னர் தன் காதலை வெளிப்படையாகவே எல்லோரிடமும் தெரிவித்த ஸ்ரேயா தன் காதலரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் மார்ச் மாதம் திருமணம் செய்வேன் என்றும் அறிவித்தார். ஆனால் திருமண தேதியை அறிவிக்க மறுத்துவிட்ட நிலையில் ஸ்ரேயா - ஆன்டிரே கோச்சேவ் திருமணம் மும்பையில் கடந்த 12ந்தேதி ரகசியமாக நடந்தது. இந்த திருமணத்தில் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.இந்து முறைப்படி நடந்த இந்த திருமணம் பற்றிய தகவல் இன்று மும்பை சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது. பின்னர் ஸ்ரேயாவும் இதை உறுதி செய்தார்.