பிரபல மலையாள நடிகையான ஷகிலா, ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். அவருடைய படங்கள் வெளியாகிறது என்றால் அப்போது வெளியாகும் மலையாள சூப்பர் ஸ்டார் படங்களுக்கே பாதிப்பு ஏற்படுமாம். அந்தளவிற்கு இவர் நடிக்கும் படங்கள் அப்போதைய கால கட்டத்தில் வசூலை வாரிக்குவித்தது. இதனையடுத்து இவருடைய படங்களால் சமூகத்தில் இளைஞர்களின் வாழ்க்கை கெடுகின்றது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கேரளாவை விட்டு ஷகிலா வெளியேற வேண்டும் என்றெல்லாம் குரல் எழுந்தது.
இந்நிலையில் மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ளை ராஜுவுக்கு நடிகை ஷகிலா காதல் கடிதம் அனுப்பினார் என்றும், கடைசிவரை அந்த கடிதத்துக்கு அவர் பதில் சொல்லவில்லை என்றும் தகவல் வெளியானது.
தற்போது இந்த தகவல் குறித்து ஷகிலா ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். “சோட்டா மும்பை மலையாள படத்தில் நடித்தபோது மணியம்பிள்ளைக்கு நான் காதல் கடிதம் கொடுத்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அப்போது எனது தாயார் உடல் நலம் குன்றி இருந்தார். அதற்கு மணியம்பிள்ளை பண உதவி செய்தார். அவருக்கு நான் காதல் கடிதம் கொடுக்கவில்லை. அப்போது போஸ் என்ற இளைஞரை நான் காதலித்தேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.