
கடந்த ஆண்டு மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் மாபெரும் வெற்றிபெற்றது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் உருவான இப்படத்தை ஹிந்தியில் ‘ரீமேக்’ ஆக இருக்கிறது. இதில் நடிகர் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க விரும்புவதாகவும், மாதவன் தமிழில் நடித்த பாத்திரத்தில் இந்தியிலும் அவரே நடிக்க வேண்டும் என்று ஷாருக்கான் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முன்னதாக ஹிந்தி ரீமேக்கை புஷ்கர்-காயத்ரியே இயக்குவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என்று ஷாருக் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பார் என்று இந்தி பட உலகில் பரவலாக பேசப்படுகிறது.