Published on 10/11/2018 | Edited on 10/11/2018
விஜய் சேதுபதியின் '96' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக இவர் நடிப்பில் 25வது படமாக உருவாகியுள்ள 'சீதக்காதி' படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் 3வது லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞராக நடித்திருக்கிறார். மேலும் நாடக கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.