தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான புது முயற்சிகளை மேற்கொண்டு வரும் பார்த்திபன் கடைசியாக 'இரவின் நிழல்' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான 301 திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் இடம்பெற்றது.
இதையடுத்து '52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். மேலும் இரண்டு படங்களை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இப்போது அதன் பணிகளில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் பார்த்திபன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் சீனு ராமசாமி அவரது எக்ஸ் தளத்தில், "சினிமா தீவிரவாதி" எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
சினிமா தீவிரவாதி
திரு @rparthiepan அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
❤️❤️❤️❤️ pic.twitter.com/dMC5HuE8rV— Seenu Ramasamy (@seenuramasamy) October 14, 2023