Skip to main content

சசிகுமாருக்காக சமுத்திரக்கனி அடித்த க்ளாப் 

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
sasikumar

 

 

 

குற்றம் 23, மற்றும் தடம் ஆகிய படங்களை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் - இந்தர்குமார் தயாரிப்பில் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’. ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் சசிகுமாருடன் இணைந்துள்ளார். 1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா  செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இன்று நவம்பர் 12ஆம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகிறது.

 


 

சார்ந்த செய்திகள்