Skip to main content

'என் கதாபாத்திரம் பவர்ஃபுல்லானது!' - சங்கீதா 

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் 'தமிழரசன்'. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

 

sangeetha actress

 

மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட், யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் மிக முக்கிய வேடத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்த சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் மீண்டும் இந்த படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து சங்கீதா பேசும்போது...." எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன். இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்