Skip to main content

‘மனுஷங்க மிருகமா வாழுற இந்த சமூகத்துல...’ - கவனம் பெறும் ரஜினி வெளியிட்ட ட்ரைலர்   

Published on 10/12/2024 | Edited on 10/12/2024
anbumani ramadoss alangu movie trailer released

பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜேஷ் இசையமைத்துள்ள இப்படம் ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்த பழங்குடியினரின் பின்னணியில் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. 

அதற்கேற்றபடியே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. பின்பு வெளியான ‘காளியம்மா’, ‘கொங்கு சாங்’ஆகிய பாடல்களும் தமிழக, கேரள எல்லை பகுதிகளில் படமாக்கப்பட்டதாக அமைந்திருந்தது. இந்தப் படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்த பழங்குடியினரின் பின்னணியில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதற்கு அடுத்து வெளியான ‘காளியம்மா’, ‘கொங்கு சாங்’ஆகிய பாடல்களும் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டதாக அமைந்திருந்தது. 

இப்படத்தின் ட்ரைலரை வெளியிடுவதற்காக சௌமியா அன்புமணி உள்ளிட்ட படக்குழுவினர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் முன்பு வெளியான தகவல் போல ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை அழுத்தமான காட்சிகளுடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. மேலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.   

சார்ந்த செய்திகள்