Skip to main content

பூதாகரமாகிய அமைச்சரின் பேச்சு; எதிர்ப்பு தெரிவித்த சமந்தா

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
samantha clarifies to his divorce speech of Telangana minister Konda Surekha

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சமந்தா.  பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிவதாக அறிவித்தார். அதன்படி தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சமந்தா தற்போது சிட்டாடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடர் நவம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. 

இந்த சூழலில் தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா விவகாரத்துக்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகர் மற்றும் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனா, “உங்கள் எதிரிகளை விமர்சிப்பதற்காக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை பயன்படுத்தாதீர்கள். உங்கள் கருத்துக்களை உடனடியாக திரும்ப பெறுங்கள்” என கண்டனத்தை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜூன் என பல திரை பிரபலங்களும் தங்களது கண்டனத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் கொண்ட சுரேகாவுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பினார்.

samantha clarifies to his divorce speech of Telangana minister Konda Surekha

இதனைத் தொடர்ந்து சமந்தா இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஒரு பெண்ணாக வெளியே வந்து வேலை பார்ப்பது, அதுவும் பெண்களை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் கவர்ச்சிகரமான இந்த துறையில் பௌஅணிப்பது, காதலில் விழுந்து பின்பு விலகி அதிலிருந்து எழுந்து நின்று இன்றுவரை போராடுவது... என்று இது போன்ற விஷயங்களுக்கு நிறைய தைரியமும் வலிமையும் வேண்டும். இந்த பயணம் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். தயவு செய்து அதனை சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உங்கள் வார்த்தை எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு நபரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு நீங்கள் பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ஊங்களை கேட்டுக்கொள்கிறேன். எனது விவகாரம் பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வையுங்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், அதையே தொடரவும் விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். 

சார்ந்த செய்திகள்