Published on 10/11/2018 | Edited on 10/11/2018
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'சர்கார்' படம் பல்வேறு சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை நிகழ்த்திவரும் நிலையில் அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தின் முன்பதிவு சாதனையை இன்னும் எந்த திரைப்படமும் முறியடிக்கவில்லை' என்று ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி நிகிலேஷ் சத்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், 'விஸ்வாசம்' படத்திற்காக தாங்கள் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் பதில் கருத்து பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'விஸ்வாசம்' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.