Skip to main content

எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் பிக்பாஸ் நடிகை     



mgr

 

 

 

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை 'காமராஜ்' என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை 'எம்.ஜி.ஆர்' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்கும் இப்படத்தில் எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர். மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் துவங்கவுள்ள இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார்.

 

 

 

 

 


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்