Skip to main content

800 கோடியில் அம்பானி எடுக்கும் பிரமாண்ட தமிழ் படம்....

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு. தற்போது அவருடைய கனவுப்படத்தை சாத்தியமாக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.
 

raavanan

 

 

பல வருடங்களாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் தள்ளிப் போய்விடுகிறது.

 
தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும்  ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.

 
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பட்ஜெட் பெரிதாக இருப்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.
 

 

 

இது சோழர் காலத்து கதை என்பதால் பழைய அரண்மனை செட், ஆடை ஆபரணங்கள், பல நடிகர்கள் என்று தயாரிப்பு செலவுகள் ஊயர்ந்துள்ளதாம். இரண்டு பாகங்களாக எடுக்க இருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் செலவுகள் 800 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்