அண்மையில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவர்கொண்டா, ஆலியா பாட், பார்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்ட சினிமா ரவுண்டேபிள் பேட்டியில் தமிழக நடிகர் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார். இதில் சினிமா பற்றியன ஒவ்வொரு நடிகர்களுக்குள் இறுக்கும் புரிதல் குறித்தும், பலவற்றை பற்றியும் பேசிக்கொண்டனர்.
![ranveer singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/NWeVjwOLWfmR8vkcjsxooPxY8PlcubUAFAPmlk9xnT0/1574766801/sites/default/files/inline-images/ranveer-singh.jpg)
விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அப்போது பேசிய பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங், “என்னுடைய நண்பர் ஒருவர் எனக்கு ஒருமுறை போன் செய்து, ‘சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன் அதில் ஒரு 10 வயது சிறுவனின் நடிப்பை பார்த்து மிரண்டுவிட்டேன் நீயும் பார்க்க வேண்டும்’என்றார். அதன்பின் அந்த படத்தை நான் பார்த்தேன், உண்மையிலேயே ராசுக்குட்டி நடிப்பும், விஜய் சேதுபதியுடனான அந்த சிறுவனுக்கு இருக்கும் கெமிஸ்ட்ரியும் வேற லெவலாக இருந்தது” என்று மிகவும் குஷியாக அங்கிருந்த மற்ற ஸ்டார்களுக்கு முன்பு தெரிவித்தார்.