Skip to main content

“இதுதான் எனது கனவு” - இயக்குநர் ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

ramgopal varma talk about ponnu movie

 

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படத்தை பொண்ணு என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூஜா பலேகர் சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். இப்படத்தை  ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

அதில் பேசிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, "இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களிலிருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவர் படங்களை நான் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. அவர் மிக ஒல்லியான உருவம் கொண்டவர் ஆனால் திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரைத் தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விப்பட்டுச் சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன். 

 

அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு இந்தப் படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் எனத் திட்டமிட்டோம். ஹைதராபாத்தில் புரூஸ் லீயின் 'என்டர் தி டிராகன்' திரைப்படம் பார்க்க என்னிடம் பணம் இல்லை ஆனால் இப்போது என்னுடைய மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் அதே தியேட்டரில் வெளியாகவுள்ளது மகிழ்ச்சி. இதுதான் எனது  கனவு, இப்போது நனவாகி இருப்பது சந்தோஷம்" என நெகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார். 

 

 

 

சார்ந்த செய்திகள்