
'என்னமோ ஏதோ' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பிறகு தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத்சிங் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிகர் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இதையடுத்து தமிழில் அடுத்ததாக சூர்யாவுடன் என்ஜிகே, மற்றும் கார்த்தியுடனும், சிவகார்த்திகேயனுடன் ஒரு, ஒரு படம் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தன் அடுத்தடுத்த படங்களை பற்றி பேசுகையில்....."நான் சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறேன். செல்வராகவன் கலைஞர்களின் முழு திறமையை வெளியே கொண்டு வருபவர். அவருடன் இந்த படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. கார்த்தி படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். சினிமா என்றாலே பொழுது போக்கு தான். உண்மை கதைகளில் நடித்துக்கொண்டே இருந்தால் நடனம் ஆட முடியாது. சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இந்த படம் குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும். நான் ஏ.ஆர்.ரகுமான் சார் இசையை எப்பொழுதும் ரசித்து கேட்பேன். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் சார் இசை அமைக்கிறார் என்று தெரிந்ததும் என் கனவு நிறைவேறி விட்டது போன்று உணர்ந்தேன். இந்த படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.