
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன் ஒரே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும், 'சிவா மனசுல சக்தி' புகழ் ராஜேஷ் எம் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க பல நடிகைகளின் பெயர் அடிப்பட்ட நிலையில், தற்போது ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளர். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் இதன் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.