![rakul](http://image.nakkheeran.in/cdn/farfuture/HVM-bZTkv7bPeZX_eFPI7waptu0kYVCJsTqquNgILbM/1533347632/sites/default/files/inline-images/Rakul%20Preet%20Stills%20From%20Bruce%20Lee%20Movie%20In%20Red%20Dress%20%283%29.jpg)
என்னமோ எதோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ரகுல்பிரீத் சிங். சமீபத்தில் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரகுல்பிரீத் சிங் தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு வரப்போகும் ஆண்மகனை பற்றி ரகுல் பேசுகையில்...நான் நடிகையாக வேண்டும் என்று திட்டமிடவில்லை. கைச்செலவுக்காகத்தான் நடிக்க வந்தேன். கேமரா முன்னால் நிற்பது பிடித்ததால் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால் திட்டமிடுவது தேவை இல்லை. தற்போது வந்துள்ள ஆன்மிக எண்ணங்களால் எனக்கு முதிர்ச்சி ஏற்பட்டு, நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.மேலும் அறிவில் தெளிவும் வந்து இருக்கிறது. எனக்கு எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்கிறார்கள். நான் 5.9 அடி இருக்கிறேன். எனவே அதற்கும் மேல் உயரமாக உள்ள ஆண்களை பிடிக்கும். குறைந்தது ஆறடி உயரமாவது இருக்க வேண்டும்.