Skip to main content

"தைரியமா இரு கண்ணா, உனக்கு ஒன்னும் ஆகாது" - ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறிய ரஜினி !

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

Rajinikanth spoke get well soon video message his fan daughter

 

பெங்களூருவைச் சேர்ந்த ரஜினி ரசிகர் தனது மகள் சவுமியா உடல்நிலை சரியில்லை, அவர் உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறார் என வீடியோ ஒன்றை பதிவுசெய்து ரஜினிகாந்த் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார்.

 

இதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், அந்த ரசிகரின் மகளுக்கு ஆறுதல் கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சவுமியா எப்படி இருக்க, உனக்கு ஒன்னும் ஆகாது. என்னை மன்னித்துவிடு கண்ணா. நான் வந்து உன்னைப் பார்க்க முடியாது. எனக்கும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. இல்லையென்றால், உன்னை வந்து நான் சந்தித்திருப்பேன். தைரியமா இரு, ஆண்டவனிடம் உனக்காக நான் வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் காலமான ரசிகர் - வீட்டிற்கு சென்று சூர்யா அஞ்சலி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
suriya paid tribute to his fan passed away

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.

அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவரான மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி சாலை விபத்தில் மறைந்துள்ளார். இதனால் அவரின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, மணிகண்டன் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.