சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 15/08/1975ஆம் ஆண்டு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்படி ரஜினிகாந்த் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்து வரும் 15ஆம் தேதியோடு 45 வருடங்கள் நிறைவாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் ரஜினியின் 45 ஆண்டுகள் என்ற போஸ்டரை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில், தனக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார் ரஜினிகாந்த். அதில்...
''என்னுடைய திரையுலக பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. ??
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை ??'' என கூறியுள்ளார்.