Skip to main content

“வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” - ரஜினிகாந்த்

Published on 13/12/2024 | Edited on 13/12/2024
rajini thanked ro all regards his birthday wishes

இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக வலம் வரும் ரஜினிகாந்த், நேற்று தனது 74வது வயதில் அடியெடுத்து வைத்தார். மேலும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி பட படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். படக்குழுவும் ரஜினி பிறந்தநாளை ஒட்டி படத்தில் இருந்து ‘சிக்கிட்டு வைப்...’(Chikitu Vibe)எனும் பாடலின் க்ளிம்ப்ஸை வெளியிட்டிருந்தது. இப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் பட இரண்டாம் பாகத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையே ரஜினியின் பிறந்தாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் தலைவர்கள், முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் எக்ஸ் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வாழ்த்திய அனைவரும் நன்றி தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய பிறந்தநாளன்று என்னை மனமார வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அன்புத்தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் நண்பர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஓ.பன்னீர் செல்வம், வைகோ, வி.கே.சசிகலா, திருநாவுக்கரசர், துரைமுருகன், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், வாசன், ஏ.சி.சண்முகம், சீமான், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்...

திரையுலகத்திலிருந்து நண்பர் கமலஹாசன், வைரமுத்து, முத்துராமன், விஜயகுமார். சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர்கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அநேக நடிகர், நடிகைகள் திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும். அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும். நண்பர்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்