Skip to main content

"பெரிய நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள், ஆனால் வாழ வைப்பதில்லை" - கே.ராஜன் காட்டம்

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

producer k rajan talk about not reachable movie

 

அறிமுக இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

 

ad

 

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா  நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், "திறமைகளோடு வரும் புதியவர்கள் சினிமாவில் ஜெயிக்க வேண்டும். சினிமாவை இப்போது காப்பாற்றுபவர்கள் சின்ன பட தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சினிமாவை வைத்து பிழைக்கிறார்கள் ஆனால்  வாழ வைப்பதில்லை. பெரிய நடிகர்கள் இப்போதெல்லாம் ஷூட்டிங் வெளி மாநிலங்களில் வைக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ரஜினி சாரிடமே இதை மாற்ற நான் வேண்டுகோளாக வைத்திருக்கிறேன். இப்போது படம் எடுப்பது பிரச்சனை இல்லை, அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டம். மக்கள் பார்க்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் படத்தை ரிலீஸ் பண்ண முடிவதில்லை. பல சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவை வாழ வைத்திருக்கிறது. சிக்கனமாக செலவு செய்து படம் எடுங்கள், சினிமாவில் பணம் போட்டால் பணம் திரும்பி வருவதில்லை. நாட் ரீச்சபிள் மக்களை ரீச் செய்யும் என வாழ்த்துகிறேன்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்