Skip to main content

அஜித் நல்லவரா, கெட்டவரா? - மோதிக்கொண்ட பிரபலங்கள்!

Published on 03/05/2018 | Edited on 04/05/2018
suseenthiran

 

உழைப்பாளர் தினத்தன்று பிறந்த நாள் கொண்டாடிய அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது இயக்குனர் சுசீந்திரனும் அஜித்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதில்..."நான் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு மூன்று லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம். அப்பொழுதுதான் முதன் முதலில் ஜனா படத்தின் படப்பிடிப்பில் அஜித் சாரை சந்தித்தேன். ரோஜா ரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சகதொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் சார் தான். அன்று முதல் அஜித் சார் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் சாருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

 

suseenthiran

 

இதை பார்த்த பலரும் சுசீந்திரனை பாராட்டியுள்ள நிலையில் சுசீந்திரனின் பதிவில் உண்மை இல்லை என்று சக இயக்குனரான இலக்கியன் தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...."இந்த செய்தி முற்றிலும் பொய். இதை ரோஜா ரமணின் ஆன்மாவே மன்னிக்காது. அஜித்திடம் பேசியது நான். அஜித் சார் அந்த சமயத்தில் பெரியதாக பண உதவி செய்யவில்லை. அஜித் சாரிடம் கால்ஷீட் வாங்கவே அஜித் சாரை பற்றி சுசீந்திரன் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார். பி.கு : இது நடந்த சமயம் ஜனா பட சூட்டிங் கிடையாது. வில்லன் பட சூட்டிங்” என பதிவிட்டுள்ளார். இப்படி இலக்கியனும், சுசீந்திரனும் சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்டது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜி.வி.பிரகாஷிற்கு டாக்டர் பட்டம்!

Published on 18/05/2018 | Edited on 19/05/2018
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல வடிவங்களிலும் கலக்கிக்கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். 'நாச்சியார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடங்காதவன், 4ஜி, சர்வம் தாளமயம் என்று அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சமூக பிரச்சனைகளுக்கு ட்விட்டரில் குரல் கொடுப்பதிலும், சில சமயங்களில் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் கூட ஈடுபடுகிறார். 

 gvp doctorate


ஜல்லிக்கட்டில் ஆரம்பித்து நீட், கதிராமங்கலம், நெடுவாசல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என இவர் குரல் கொடுத்ததையும் ஈடுபட்டதையும் சமூகப் பணியாக கருத்தில் கொண்டு, அதை கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரூஸ்   இறையியல் பல்கலைக்கழகம் என்ற பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதற்கு முன் நடிகர் விஜய்க்கு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

"டிக் டிக் டிக்"  ரிலீஸ் தேதி அறிவிப்பு 

Published on 05/05/2018 | Edited on 07/05/2018

மிருதன் படத்திற்கு பிறகு இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் "டிக் டிக் டிக்"  இது இவர்கள் கூட்டணியில் வெளியாகும் இரண்டாவது திரைப்படமாகும். இந்த படத்தின் கதைக்களம் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவியின் மகன் ஆரவும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

tik tik tik release date

 

இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸாக இருந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது ஜூன் 22 ஆம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு உறுதி செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.