Skip to main content

பிக்பாஸ் வீட்டில் செய்ததை மேடையில் செய்த பொன்னம்பலம்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
ponambalam

 

 

 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.ஈ. ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. ஹாரர் காமெடி திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மேலும்  கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான்விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது நிகழ்ச்சி மேடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நடிகர் பொன்னம்பலம் பேசியபோது... "இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குனர் டீகே எனக்கு கொடுத்துள்ளார். நாங்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பது போல, இயக்குனர் டீகேவுக்கு 'டிராகுலா கிங்' என்கிற பட்டத்தை வழங்குகிறேன்" என்றார்.
  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதையே தான் 'காட்டேரி' பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சாரும் சொன்னார்' - இயக்குனர் டீகே பெருமிதம்

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
deekey

 

‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி என பலர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் டீகே தன் 'காட்டேரி' படம் குறித்து பேசியபோது....

 

"என்னுடைய முதல் படம் காட்டேரி என்று சொல்லலாம். ஏனெனில் நான் இதற்கு முன் இயக்கிய இரண்டுப் படங்களைக் காட்டிலும், இந்த படத்தில் தான் நான் நினைத்ததை நினைத்தமாதிரி படமாக்க முடிந்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அழுத்தமோ, நெருக்கடியோ எனக்கு கொடுக்கப்படவில்லை. நான் என்ன கதையை சொன்னேனோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இதையே தான் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரும் சொன்னார்கள். 

 

 

இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாரர் ஜேனருக்குள் பல வெரைட்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் 'காட்டேரி'. ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது வரை  உள்ள அனைத்தினருக்கும் இந்த 'காட்டேரி' பிடிக்கும். படம் முடிவடைந்துவிட்டது. வெளியீட்டிற்கு பொருத்தமான தேதிக்காகவும், திரையரங்கத்திற்காகவும் காத்திருக்கிறோம்" என்றார்.

 

 

Next Story

இதிலும் 'பன்னி மூஞ்சி வாயன்' உண்டு...- காட்டேரி இயக்குனர் தகவல்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
katteri

 

 

 

'மேயாதமான்' படத்தையடுத்து நடிகர் வைபவ் நடிப்பில் அடுத்ததாக 'ஆர்.கே. நகர்' படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து அவர் ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் 'காட்டேரி' படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'யாமிருக்க பயமேன்', 'கவலை வேண்டாம்' படத்தை இயக்கிய டீகே இப்படத்தை இயக்கியுள்ளார். 

 

 

 

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் டீகே பேசும்போது..... "காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த கதைக்கு 'காட்டேரி' என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்ற அபிப்ராயமும் சொன்னார். அந்த தலைப்பு எனக்கும் பிடித்திருந்தது. கதைக்கும் ஏற்றதாக இருந்தது. இந்த படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கும் திட்டமிருந்தது. ஆனால் எனக்கு தெலுங்கு தெரியாததால், தமிழில் இந்த படத்தை எடுக்க தீர்மானித்தோம். அதனால் வைபவ் நாயகன் ஆனார். அவருக்கு ஜோடியாக சோனம் பஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணாலி ரத்தோர் என நான்கு நாயகிகள் ஒப்பந்தமானார்கள். 

 

 

 

இதில் சற்று சுயநலமிக்க கேரக்டரில் சோனம் பஜ்வா நடிக்கிறார். மன நல மருத்துவராக ஆத்மிகா நடிக்கிறார். வரலட்சுமியும், மணாலி ரத்தோரும் கதையில் இடம்பெறும் 1960 சம்பந்தப்பட்ட பீரியட் போர்ஷனில் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார்கள். என்னுடைய முதல் படமான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்ற கேரக்டர் பிரபலமானது போல், இந்த படத்திலும் ரகளையான கேரக்டர்கள் இருக்கிறது. இதனால் இந்த காட்டேரியை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இந்த காட்டேரி ரத்தம் குடிக்காத காமெடி பேய்" என்றார்.