Skip to main content

"சூர்யா குடும்பத்தினரின் படங்களை திரையிட வேண்டாம் " - பாமக எம்.எல்.ஏ. அறிக்கை 

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

pmk mla arul talk about jai bhim movie issue

 

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிவருகின்றனர். 

 

இதையடுத்து, ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் பாமக, பாஜக கட்சிகள் ‘ஜெய் பீம்’ படத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவருகின்றன. இதனைக் கண்டித்து சூர்யாவுக்கு ஆதரவாகப்  பலரும் அறிக்கை வெளியிட்டுவருகின்றனர். 

 

ad

 

இந்நிலையில், நடிகர் சூர்யா குடும்பத்தினரின் திரைப்படங்களைத் திரையிட வேண்டாம் என பாமக எம்.எல்.ஏ. அருள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரைப்பட நடிகர் சூர்யா நடித்து ஓடிடியில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்துள்ளது தமிழகம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மனதை பெரிதும் புண்படுத்தியுள்ளது.  இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள உள்ள இளைஞர்கள் பெரிதும் கொந்தளிப்பாக உள்ளனர். எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் மற்றும் அந்த நடிகர் குடும்பத்தினரின் திரைப்படங்களைத் தயவுசெய்து திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்