Skip to main content

இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

pm modi birthday wishes to ilaiyaraaja

 

இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது  உலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். திரைத்துறையில் தனது நீண்ட  பயணத்தில் காதல், கண்ணீர், மகிழ்ச்சி உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் பொருந்தும் வகையில் தனித்தனியே இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளார். 

 

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா தனது 80 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் ரசிகர்கள், தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய பிரதமர் மோடி இளையராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

இளையராஜா சமீபத்தில் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தகத்தில் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியதோடு,பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்