பிரபல நடிகை ஸ்ரீதேவி, 2018ஆம் ஆண்டில், துபாயில் ஒரு ஓட்டல் அறையில் குளியல் தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந் தீப்தி பின்னிதி என்பவர், ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இரு அரசுகளும் அதை மூடி மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் அவரது யூட்யூப்பில், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள் என கூறி பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுதிய கடிதங்கள் என வெளியிட்டிருந்தார். இதையடுத்து தீப்தி பின்னிதி மீது மும்பையை சேர்ந்த சாந்தினி ஷா என்ற வழக்கறிஞர் பிரதமர் அலுவலகத்தில் புகாரளித்திருந்தார். இந்த புகார் குறித்து தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் தீப்தி பின்னிதி வீட்டில் ஆய்வு மேற்கொண்டு, செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றியது.
இந்த நிலையில் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத்சிங் கடிதங்கள் உட்பட தீப்தி தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என விசாரணையில் தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.