Published on 12/12/2023 | Edited on 12/12/2023
![Perilloor Premier League update](http://image.nakkheeran.in/cdn/farfuture/-IitvZq60ewTCQ-8Kuy37RWggY6u7S4YAFaXk5_yEyk/1702387860/sites/default/files/inline-images/113_34.jpg)
இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரவீன் சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’. தீபு பிரதீப் எழுதியுள்ள இந்த சீரிஸில் நிகிலா விமல், சன்னி வெய்ன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் விஜயராகவன், அசோகன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முஜீப் மஜீதின் இசையமைத்துள்ளார்.
இந்த சீரிஸின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த ட்ரைலர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களுக்கு இடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், நகைச்சுவை என நிறைந்திருக்கிறது. இந்த சீரிஸ் 7 மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.