சூர்யாவின் தயாரிப்பில் உறியடி 2 வெளியாகியுள்ளது. ஏற்கனவே உறியடி முதல் பாகம் பல அரசியல் கருத்துக்களைப் பேசி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. தொடந்து உறியடி இரண்டாம் பாகம் மிகுந்த எதிர்ப்பார்பில் வெளியாகியுள்ளது. படம் தொடங்கும்முன் படத்தின் இயக்குனரும் நடிகருமான விஜயகுமார் “நேர்மையான ஒரு படத்தை, சொல்ல வேண்டிய ஒரு கதையை சொல்லியிருக்கோம். பிரச்சார நெடியில் இல்லாமல் முழுமையான படமாக இதை எதிர்ப்பார்கலாம்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் படத்தைவிட அரசியல் குறித்தே அதிகமாக பேசினர்...
“ஸ்டெர்லைட் மாதிரி ஆலையை கொண்டு வரணும்னா அதுக்கான பாதுகாப்பு விஷயங்களை சரியா கவனிச்சுருக்கணும், அதை அரசாங்கமும் தெரிஞ்சுவச்சுருக்கணும், மக்களுக்கும் அது தெரியணும் அப்படினு செகண்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க. எப்பவுமே ஆளுங்கட்சி எதிர்கட்சியாகுது திரும்பவும் எதிர்கட்சி ஆளுங்கட்சியாகுது. எல்லாமே நம்ம போடுற ஓட்டுல தானே இருக்குனு ஃபர்ஸ்ட் ஹாஃபில் சொல்லியிருக்காங்க”
“ஸ்டெர்லைட்டை மூட சொல்றாங்க, தயவுசெஞ்சு எல்லாரும் சேர்ந்து மூடிடுங்க. நானும் வறேன்”
“ஏப்ரல் 18 தேர்தலில் கண்டிப்பா மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற படிச்ச இளைஞர்களுக்கு ஓட்டுப் போட சொல்லி பத்துபேர் கிட்டயாவது நான் சொல்லுவேன். அரசியல் மாற்றம் உடனே நடந்துடாது, அதை நாம் நடத்துவோம்”
“ஒரு பெரிய பிரச்சனையை பேசி அதற்கான தீர்வையும் உறியடி ஸ்டைலில் சொல்லியிருக்காங்க. அந்த கோவம் ரொம்ப சாரியாக இருந்துச்சு”
“சாமானிய மனிதனுடைய வலியையும் வேதனையையும் தெளிவா சொல்லியிருக்க படம். 100 சதவீதம் சரியான படம். இதைப் பார்த்துட்டு போங்க, சரியான ஆளுக்கு ஓட்டுப் போடுங்க” என்று பெரும்பாலான ரசிகர்கள் படத்தை தேர்தலுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். தொடர்ந்து யூ-ட்யூப் பிரபலம் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் படத்தைப் பற்றிக் கூறுகையில்...
“உறியடி 1 ஒரு ஆழமா அரசியல் பேசுனுச்சு. அதைவிட ஆழமான அரசியலை உறியடி 2 வும் பேசியிருக்கு. சர்வதேச அரசியலை ரொம்ப எளிமையாக சொல்லியிருக்கு. போராட்டம் வேண்டும் வேண்டாம்னு சொல்றவுங்க மத்தியில் ஒரு மாசுபாடு ஏற்பட்டால் மக்களோட வலி எப்படி இருக்கும் அப்படினு சொல்லியிருக்காங்க. மனம் கனத்துதான் படம் பார்க்கவேண்டியிருக்கு. இந்த படம் எப்போ வந்தாலுமே அதுக்கப்புறம் வருகிற எலெக்ஷனின் போது இந்தப் படத்தைப் பற்றி நினைச்சுதான் ஆகணும். தேர்தல் அரசியலையும் தாண்டி பிரச்சனைகள் எங்கயோ யாருக்கோ நடக்குதுனு நினைச்சுக்கிட்டு இருப்போம் இல்லையா, அந்த பிரச்சனை நமக்கு நம்ம வீட்டில் நடந்தா அந்த வலி எப்படி இருக்கும்னு காட்டியிருக்காங்க. படத்தால் மாற்றம் வந்துடும் என்றால் 75 வருஷத்தில் எப்பவோ மாற்றம் வந்துருக்கும். ஆனால், இந்த படம் பேசியிருக்க விஷயம் எல்லோருக்குள்ளும் ஆழமாக பதிய வேண்டிய ஒன்னு”என்றார்.