சென்ற வருடம் நடந்த சினிமா ஸ்ட்ரைக்கிற்கு பிறகு நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணங்களை குரைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையை உறுதி செய்தது தமிழக அரசு. அதன்படி குறைந்தபட்ச கட்டணமாக ருபாய் 10 நிர்ணயிக்கப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் குறைக்கப்பட்டன. ஆனாலும் சில தியேட்டர்களில் இன்னமும் அதிக கட்டணங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இதை கண்டித்து சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த எஸ்.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்... "பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் உரிய வாகன கட்டணம் வசூலிப்பது இல்லை. அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். திரையரங்குகளில் இருக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதனால் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். இது திரையரங்கு ஒழுங்குமுறை விதிகளுக்கு எதிரானது. திரையரங்குகளில் உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. உள்ளே விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது. குடிநீர் கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை" என்று வழக்கு தொடர்ந்துள்ளார். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் திரையரங்குகளில் உள்ள வாகன பார்க்கிங் கட்டணம் தொடர்பாக அரசு என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.