Published on 07/06/2018 | Edited on 08/06/2018
ரஜினியின் 'காலா' படம் பல்வேறு தடைகளை கடந்து உலகமெங்கும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் படையெடுத்து பட்டாசு வெடித்தும், பாலபிஷேகம் செத்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். மேலும் படக்குழுவும் அவ்வப்போது தியேட்டர்களுக்கு விசிட் அடித்து ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டங்களையும் ரசித்தனர். இந்நிலையில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ரசித்த பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் பேசியபோது... "காலா' படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்தது போலவே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது" என்றார்.