Published on 07/11/2018 | Edited on 07/11/2018
'மெர்சல்' படத்திற்கு பிறகு நடிகை நித்யா மேனன் அடுத்ததாக 'தி அயர்ன் லேடி' ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கயுள்ளார். கூடவே மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் 'சைக்கோ' படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் நித்யாமேனன் அடுத்ததாக ஒரே நேரத்தில் ஹிந்தியில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கும் 'மிஷன் மங்கள்' படத்திலும் நடிக்கவுள்ளார். செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தினை ஜெகன் ஷக்தி இயக்கவுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தில் அவருடன் இணைந்து வித்யா பாலன், சோனாக்ஷி சின்கா, டாப்சி என முன்னணி நடிகைகளும் நடிக்க உள்ளனர்.