Skip to main content

நிதி திரட்ட ஆடைகளை ஏலம் விடும் நித்யா மேனன்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

nithya menon


இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
 


இன்று (20/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,139- லிருந்து 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163- லிருந்து 3,303 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174- லிருந்து 42,298 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 61,149 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவ தன்னுடைய ஆடைகளை ஏலம் விடுகிறார். 

இது பற்றி நித்யா மேனன், "நான் இந்த உடையை ஏலத்திற்காகக் கொடுக்கப் போகிறேன். அதில் வரும் பணத்தில் 100 சதவீதமும் அப்பணம் டிரஸ்ட்டுக்குச் செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்குப் பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலிலேயே நிற்க வழி செய்யப்படுகிறது. இந்த உடையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே ஸ்பெ‌ஷலாக செய்யப்பட்டது. பே‌ஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்வதற்காக தான் இந்த உடை டிசைன் செய்யப்பட்டது. 
 

 


இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார். அவர் அழகான, இயற்கையாக தெரியும் உடைகளைத் தயாரிப்பவர்"  என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்