பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ். அமெரிக்காவை சேர்ந்த இவர் பாடகராகவும் நடிகராகவும் பயணித்து வருகிறார். இவர் சகோதரர்கள் ஜோ மற்றும் கெவின் ஆகியோருடன் இணைந்து ‘ஜோனஸ் பிரதர்ஸ்’ என்ற இசைக்குழு இன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த இசைக்குழு சார்பாக கடந்த 15ஆம் தேதி செக் குடியரசின் தலைநகரான ப்ராக் நகரில் இசை கச்சேரி நடத்தினார். அதில் தனது சகோதரர்களுடன் நிக்கல் ஜோன்ஸ் கலந்து கொண்டு பாடினார். பின்பு மேடையில் அவரது இருக்கையில் அவர் அமைந்திருந்த நிலையில் அவரது தலையில் யாரோ அடையாளம் தெரியாத நபர் திடீரென லேசர் லைட் அடித்து குறிவைத்துள்ளார். உடனே நிக்கல் ஜோன்ஸ் இருக்கையை விட்டு எழுந்து வேக வேகமாக ஓடினார். நிகழ்ச்சியை ரத்து செய்துக் கொள்ளலாம் என்ற சைகையை காண்பித்தபடியே ஓடினார். அவர் ஓடியதும் அரங்கில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மேடையில் அவரது சகோதரர்கள் அப்படியே நின்று கொண்டிருந்தனர். ஒரு பரபரப்பு சூழல் உருவானது.
நிக்கல் ஜோன்ஸ் தனது பாதுகாப்பு கருதி வெளியேறினார். பின்பு தனது பாதுகாப்பு குழுவிடம் அச்சுறுத்தல் இருப்பதாக சைகையால் சொல்லிவிட்டு சென்றார். இதையடுத்து லேசரால் குறிவைத்த அந்த அடையாளம் தெரியாத நபர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.