Skip to main content

நெல்சன் போட்ட ட்வீட்... குழப்பத்தில் ரசிகர்கள் 

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

nelson dilipkumar

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'நாளை' என இயக்குநர் நெல்சன் ஒரு ட்வீட் செய்துள்ளார். படத்தின் டீசர் குறித்து விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக அப்டேட் கேட்டு வந்ததால் நெல்சனின் இந்த ட்வீட் டீசர் குறித்த அப்டேட்டாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், தெளிவில்லாத நெல்சனின் இந்த ட்வீட், நாளை டீசர் வெளியாகுமா அல்லது டீசர் வெளியாகும் தேதி மட்டும் அறிவிக்கப்படுமா அல்லது ஏதேனும் பாடல் குறித்த அப்டேட்டாக இருக்குமோ என விஜய் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்