Skip to main content

மகனை காப்பாற்ற போராடும் தாய் - கவனம் ஈர்க்கும் நயன்தாரா பட டீசர்

Published on 16/05/2022 | Edited on 04/06/2022

 

nayanthara O2 teaser out now

 

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது ஆக்சிஜன் (o2) படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார்.  ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.  ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அதனால் பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால், சுவாச பிரச்சனைக்காக எப்போது தன் மகனுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை  பேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறி வைப்பதை அம்மாவான நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை. விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்