Skip to main content

வெளிநாட்டில் பூசணிக்காய் உடைத்த சந்திரமௌலி 

Published on 20/03/2018 | Edited on 22/03/2018

முதல் முறையாக அப்பா கார்த்திக்குடன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர்.சந்திரமௌலி. திரு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரெஜினா கசண்டரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் ஆண்ட் டிஸ்டிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திரு.தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இப்படம் குறித்து பேசும்போது.... ''படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள இரண்டு பாடல்களை படமாக்க படக்குழுவினர் தாய்லாந்து சென்றுள்ளனர். கிராபியில் காதல் பாடலையும், பேங்காக்கில் ஒரு பப் பாடலையும் படமாக்கியுள்ளனர். எங்கள் படக்குழுவினரின் சுறுசுறுப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கிருந்தவர்கள் கண்டு வியந்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை உடனே துவங்கி கூடிய விரைவில் படத்தை ரிலீசுக்கு தயாராக்கவுள்ளோம். 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கியுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும். இந்த படத்தை மே மதம் முதல் வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கோடை விடுமுறை விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்