பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் 2012 ஆம் ஆண்டு சோதனை செய்தனர். அதில் யானை தந்தங்கள் மீட்கப்பட்டது. இதை அடுத்து சட்டவிரோதமாக தந்தங்களை வைத்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் மோகன்லால் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கேரள மாநிலம் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டி மோகன்லால் தரப்பிலிருந்து மனு அளிக்கப்பட்டதை அடுத்து பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மோகன்லால் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு, இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டு மோகன்லாலின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.