Skip to main content

தமிழ் பட தயாரிப்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார்.  

 

modi

 

 

இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில்...''உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் நன்றி தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்