Skip to main content

“சேரனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு, கமலுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு”- பிக்பாஸ் மீரா சர்ச்சை பேச்சு

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

பிக்பாஸ் மீரா மிதுன் கடந்த இரண்டு நாட்களாக தினசரி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சேரன் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “சேரன் சார் தற்போது அவர் மிகவும் புனிதமானவராக திகழ்கிறார். இதே மாதிரி ஜோடி நம்பர் 1ல் இருந்த ஆசிஃப் என்பவர் நான் உள்ளே இருந்தபோது என்னை பற்றி சைகோ என்று தேவையில்லாமல் பேசியிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு தெரியும் எது குட் டச், எது பேட் டச் என்று. அந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் பாருங்கள் நன்றாக தெரியும், என்ன பிடிக்காமல் கீழே விட்டுவிடுவார். நல்லவேளையாக எனக்கு எந்த அடியும் படவில்லை. இந்த மாதிரி பல தவறுகள் ஆசிஃப் செய்திருக்கிறார். இப்போது அவருடைய பப்ளிசிட்டிக்காக இதெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். சேரன் சார் நல்லவர் முத்திரை குத்தப்பட்டதனால் ஏற்கனவே கெட்டவன் என பெயர் எடுத்த ஆசிவ் வெளியே வந்து தன்னை நல்லவராக காட்டிக்கொண்டிருக்கிறார்.
 

meera mithun

 

 

மீண்டும் சேரன் சார் பற்றி பேசுவோம். நான் பொண்ணுங்கள தெய்வமா மதிக்கிறேன், நான் பெண்களுக்கு கைகூட கொடுக்க மாட்டேன். நீங்க டி.ராஜேந்தர் சார் படம் பாத்திறுக்கிங்களா மீரா, அந்த மாதிரிதான் நானு. ஆனால், நான் அந்த வீட்டில் பார்த்த வரைக்கும் எல்லா பொண்ணுங்க மேலும் விழுந்து விழுந்து கட்டிபிடிச்சிட்டு நெருக்கமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அது எப்படி எனக்கு தெரியவில்லை.

சேரன் சார் என்னிடம் என்ன எதிர்பார்த்தார் என்றால் நான் ஒரு இயக்குனர், என்னை எல்லாரும் மதிக்க வேண்டும் நினைத்தார். அதை பற்ரி சரவணன் சார் கூட தெரிவித்திருக்கிறார். அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவரை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஐஸ் வைத்தனர். இவர் ஒரு இயக்குனர் அதனால் ஜால்ரா போட்டால் எதுவும் சான்ஸ் தருவார் என்று நினைத்தார்கள். 

நான்கு வாரம் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டு மக்களின் வாக்குகளை வாங்கி உள்ளே இருந்தேன். இதுவரை யாருக்கும் நடக்காத ஒன்று வெளியே இருந்து கமல் சார் உள்ளே வந்து, எனக்கு பந்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அடுத்த வாரம் சேரன் சாரினால் என்னுடைய நிலைமை வேறாக மாறியது. நான் அந்த மாதிரி மேன் ஹாண்டிலிங் நடந்தது சொன்ன விஷயத்தை, வேறாக சித்தரித்துவிட்டார். சேரன் சார்தான் ஒரு நல்ல இயக்குனர், நல்ல திரைக்கதை ஆசிரியர் ஆச்சே அப்படியே அந்த விஷயத்தை வேறாக மாற்றிவிட்டார்.  ‘ஐயோ நான் ரெண்டு பொண்ணுக்கு அப்பா, இப்படியெல்லாம் பண்ணமாட்டேன், வெளியே சென்றால் என் வாழ்க்கை என்னாவது’என்று நடித்து, அழுது அங்கிருக்கும் அனைவரையும் நம்ப வைத்தார். அந்த பிபி ஹவுசில் ஒருத்தர்கூட எனக்கு ஆதரவாக இல்லாமல் நின்றனர். அங்கிருக்கும் ஆம்பளைங்க எல்லாரும் சரியான கோழைகள். 

ரெண்டு பொண்ணு வச்சிருக்க சேரன் சார்தான் இதை செய்தார். ரெண்டு பொண்ணு வச்சிருக்க கமல்சாரும் எனக்கு நியாயம் தரவில்லை. அவர் ஏன் என் தரப்புல இருக்கிற நியாயத்த பார்க்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இதே அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கு நடந்திருந்தா என்ன பண்ணிருப்பாரு தெரியவில்லை. எனக்கு அப்பா இல்லை, அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்க அப்பா இருந்திருந்தார் சீனே வேற, என்ன பண்ணிருப்பாரு தெரியாது. தமிழ்நாடுல இருக்கிற சிங்கிள் டாக்டர் எல்லம் இப்படிதான் எதிர்கொள்கிறார்கள் போல. 

 


மீடூ இயக்கம் இங்கிலாந்து தொடங்கியது, புகார் வைத்தவரிடம் நியாயம் கேட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக வேலையைவிட்டு தூக்கப்பட்டார்கள். இது பாலிவுட்டில் கூட நடந்தது. ஆனால், சின்மயி மேடம் புகார் வைத்தபோது அவரை ட்ரோல்தான் செய்தார்கள். நான் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தேன் சின்மயி எனக்காக சப்போர்ட் செய்திருந்தார்கள். “அவங்க மேன்ஹாண்டிலிங் என்றுதான் சொன்னார்கள் எந்த இடத்திலும் அவர் தப்பா தொட்டாரு என்று சொல்லவில்லை” என்று நான் சொன்னதை புரிந்துகொண்டு சரியாக சொன்னார் சின்மயி.

சேரன் எனக்கு எவ்வளவு மெண்டல் டார்ச்சர் கொடுத்தார் என்று உங்களுக்கு நினைவுப்படுத்த நினைக்கிறேன். என்னிடம் வந்து உனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, என்னுடைய ட்ரெஸ்ஸிங் குறித்து சொல்றது. ஆனால், என்னவிட கவர்ச்சியாக ஆடை அணிகிற பெண்களுடன் மேலே மேலே போய் விழுறது. சேரனால் என்ன நேரில் பார்த்தால் நேராக நிற்கக்கூட முடியாது. அவருக்குதான் தாழ்வுமனப்பான்மை அவருக்குள்ள. அவர் என்கிட்டையே வந்து உங்க அப்பா உன்ன தப்பா வளர்த்திருக்கிறார் என்று கூறினார். இவர் யாரு எங்க அப்பா பேசுறதுக்கு. இந்த மாதிரி நிறைய விஷயம் உள்ள பண்ணிருக்காரு சேரன். இப்போ வந்து ரொம்ப நல்லவரா, புனிதமானவரா வெளியே சுத்திக்கிட்டு இருக்கார். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு பொண்ணு இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால் அந்த பெண் மீதே பிரச்சனைகளை திருப்பிவிடுறீங்க. ஒரு பொண்ணு என்ன லூசா தேவையில்லாம இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி வாங்குறதுக்கு. எனக்கு புகழ் வாங்க வேண்டும் என்றால் ஒரு போட்டோஷுட் புகழ் வந்துவிடும், அவ்வளவுதான். இந்த மாதிரியெல்லாம் சீப்பாக பப்ளிசிட்டி வாங்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது. நான் ஒரு பொண்ணுதான் போல்டானவள், எனக்கு என்ன நடந்ததோ அதை பயமில்லாமல் வெளியே சொல்லக்கூடியவள். வேறு வெளியே சொல்ல தைரியம் இல்ல சொல்றதுக்கு. அங்க அத்தனை ஆம்பளைங்க இருந்தாங்க, அனைவரும் என்ன நடந்தது, ஏது நடந்தது கூட கேட்காம சேரனுக்குதான் சப்போர்ட் செய்தார்கள். சேரன் என்னிடம் நேராக வந்து மன்னிப்பு கேட்கவில்லை, பொதுவாக எல்லாரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்றுதான் கூறினார். சேரன் சார் மனசாட்சிக்கு தெரியும் அவர் என்ன செய்தார் என்று காட்டமாக பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்