Skip to main content

விஜய்யுடன் இணைந்து நடிக்கும் மஞ்சு வாரியர்

Published on 30/09/2024 | Edited on 30/09/2024
manju warrier to join vijay vinoth thalapathy 69

மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அசுரன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியையடுத்து முன்னணி நடிகரான அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார். வினோத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது.   

இதையடுத்து ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான ‘மனசிலாயோ...’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே வெற்றி மாறனின் ‘விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

தமிழில் தொடர்ந்து ரஜினி, அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த மஞ்சு வாரியர் தற்போது மீண்டும் ஒரு உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 69’ படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் அரசியல் வசனத்துடன் கடந்த 14ஆம் தேதி வெளியானது. முன்னதாக இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியான நிலையில், த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் பெயர் இடம்பெற்றிருந்தது. கடைசியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்