மம்தா மோகன்தாஸ் மலையாளப் படங்களில் 2005 ஆம் ஆண்டில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ்மொழி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் விஷால் நடித்த சிவப்பதிகாரம் படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தடையறத் தாக்க, குரு என் ஆளு போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் சிறந்த பாடகியும் கூட. அதற்காக பிலிம்பேர் விருதெல்லாம் பெற்றுள்ளார்.
திடீரென புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஒப்புக்கொண்ட படங்களிலிருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பிறகு குணமடைந்துவிட்டதாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், மீண்டும் லிட்டிகோ என்ற நிறமிழப்பை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது நிறத்தை அழகை இழந்து வருவதாகவும் வருத்தத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அன்பே... நான் முன்பு எப்போதும் இல்லாதது போல் இப்போது உன்னை அணைத்துக் கொள்கிறேன். அது கண்டுபிடிக்கப்பட்டது தான், நான் நிறத்தை இழக்கிறேன்… உங்கள் முதல் கதிரை மூடுபனி வழியாக ஒளிர்வதைக் காண நான் தினமும் காலையில் உங்கள் முன் எழுகிறேன். உன்னிடம் உள்ள அனைத்தையும் கொடு.. ஏனெனில், உனது அருளால் இங்கும் என்றென்றும் நான் கடன்பட்டவளாக இருப்பேன்” என்றும், மேலும் மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில் ”எனது அன்றாட வாழ்வில் புதிய வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன. ஒரு புதிய பாத்திரத்தில் படம்.. என் முதல் பள்ளி நாளில் செல்ல உள்ள கிட்டத்தட்ட குழந்தை போன்ற உற்சாகத்துடன்.. அனைத்தும் புத்தம் புதியது.. ஆனால், அதே பழைய நான் தான்.. காதலும் மற்றும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் இணைந்திருக்கிறது ” என்றும் பதிவிட்டுள்ளார்.