Skip to main content

“இந்திய மக்களாகிய நாங்கள்...” - ஒன்று திரண்ட மலையாளத் திரையுலகினர்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
malayalam actors shared indian constitution page in his social media

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விஷால் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மலையாள திரைப் பிரபலங்களான பார்வதி, இயக்குநர் ஜோ பேபி, நடிகர் ஆஷிக் அபு உள்ளிட்ட பலர், அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அதில், “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை (இறையாண்மை சோசலிஸ்ட் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு) நாடாகவும் மற்றும் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கு உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்” என சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம், நீதி என்ற குறிப்புகள் அடங்கிய பக்கம் இடம் பெற்றுள்ளன. 

சார்ந்த செய்திகள்