Skip to main content

அவெஞ்சர்ஸ் வசூல் சாதனை... முதலிடம் பிடிப்பதில் சிக்கல்... 

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி  ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு சாட்சியாக இப்படம் வசூல் வேட்டையில் இறங்கியது. உலகளவில் அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். அவதார் படம் 2 பில்லியன் டாலரை 47 நாட்களில் கடந்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையையும் 11 நாட்களில் கடந்து முறியடித்துள்ளது. 
 

avengers

 

வசூல் சாதனையில் முதலிடத்திலுள்ள அவதார் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிலும் சீனாவிலும் படம் வசூல் தற்போது சுமாராக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவதார் வசூல் சாதனையை முறியடிக்க இன்னும் 400 மில்லியன் தேவைப்படுகிறதாம். இதுமட்டுமல்லாமல் இந்த வாரம் ஜான் விக் 3 படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனால் அவதார் வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடிப்பதில் சின்ன தடுமாற்றம் எற்பட்டுள்ளது. 
 

கடந்த வாரம் டைட்டானிக் படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்ததால், இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்