Published on 18/01/2021 | Edited on 18/01/2021

ரேகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'வெட்டி பசங்க' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசும்போது...
"மேடையில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கொரோனாவிற்கு பிறகு இது என்னுடைய முதல் மேடை. ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜுக்கு நன்றி. அனைவரும் கூறியதுபோல், நடிகர் விஜய்சேதுபதி யார் மனதையும் புண்படும்படி பேச மாட்டார். கேக் வெட்டிய சர்ச்சையில் அவர் இங்கு இருந்திருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருப்பார். அவருக்கு பதிலாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.