
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் 'மகாநதி' என்றும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜெமினி கணேசனாக துல்கர்சல்மான் நடிக்கிறார். பத்திரிக்கை நிருபராக சமந்தாவும், அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடிக்கின்றனர். மேலும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மகாநதி படம் வருகிற மே 9ஆம் ரிலீசாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று உகாதி பண்டிகையை முன்னிட்டு படத்தின் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.