Published on 08/05/2018 | Edited on 09/05/2018

ரஜினியின் 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 9ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. இந்நிலையில் பாடல் வெளியீட்டின் ப்ரோமோஷனுக்காக இப்படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழ் பதிப்பில் மொத்தம் 9 பாடல்களும், மற்ற மொழி பதிப்புகளில் 8 பாடல்களும் இடம்பெற்றுள்ன என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலில் ஒரு பகுதியை பாடியிருப்பதில் மகிழ்ச்சி என்று பாடலாசிரியர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வரிகளுக்காக நான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.