ரஜினி, பா ரஞ்சித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கியிருக்கும் படம் காலா. லைகா நிறுவனமும், வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் ஆகியோர் கூட்டாக தயாரித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே ரஜினி நடித்த 2.0 படமும் ஏப்ரலில் ரிலீசாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த 2 படங்களில் முதலில் வரப்போகும் படம் எது என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் கடைசியாக ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸ் என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து பட ரிலீஸ் வேலை நடந்து வருகிறது. எனினும் தற்போது நடந்து வரும் பட அதிபர்கள் ஸ்ட்ரைக் காரணாமாக மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் முடங்கியிருக்கிறது. மேலும் அடுத்த மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் காலா பட ரிலீஸும் தள்ளிப்போகும் என அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்துள்ள லைகா நிறுவனம்...."நாங்கள் யாரிடம் காலா பட ரிலீஸ் தேதி பற்றிய செய்தியை கூறவில்லை. அது பற்றி பரவும் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனால் காலா ரிலீஸ் பற்றிய சச்சைக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.
Published on 22/03/2018 | Edited on 23/03/2018