Skip to main content

உயிர்பித்திருக்கும் பவதாரிணியின் குரல்; விஜய்யின் பர்த்டே ட்ரீட் 

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Late singer Bhavatharini voice is in the second song of film the goat

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ லிரிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வழக்கமான விஜய் பாடல்களின் கொண்டாட்டம் சற்றும் கம்மி என்கின்றனர் சிலர். 

இந்த நிலையில் விஜய் நாளை தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில் ‘தி கோட்’ படக்குழு படத்தின் இராண்டாவது பாடலை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட்டவுள்ளது. இதனையொட்டி தற்போது ‘சின்னசின்ன கண்கள்...’ என்ற இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டாவது பாடலையும் விஜய் பாடியிருக்கும் நிலையில் அவருடன் இணைந்து மறைந்த பாடகி பபவதாரிணியின் குரலுல் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு கபிலன் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். பவதாரிணி அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளது படக்குழு. 

சார்ந்த செய்திகள்