உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா 2023' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவுள்ள 76வது கேன்ஸ் திரைப்பட விழா நாளை மே 17 ஆம் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் உலகில் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம், திரைப்படம் உள்ளிட்டவை திரையிடப்படவுள்ளன.
இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்படவுள்ளன. அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் (Midnight Screenings section) பிரிவிலும் ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் (Fortnight section) பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் (prestigious Cannes Classic section) பிரிவிலும் திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவின் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் ஷோவில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா மற்றும் மிருணால் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு கலந்து கொள்கிறார். இந்த வாய்ப்பு வழங்கியதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், இணையமைச்சர் எல். முருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அனுராக் தாகூர் காணொலி மூலமாக கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு நடந்த இவ்விழாவில் அனுராக் தாகூர் தலைமையில் ஒரு குழு நேரில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Thank you for this opportunity. 🙏#IndiaAtCannes #Cannes2023 #76yearsofIndependence @ianuragthakur @Murugan_MoS @ficci_india pic.twitter.com/C6WshtxKel— KhushbuSundar (@khushsundar) May 16, 2023